தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தாய்மாமன் அந்தஸ்த்து வழங்கிய சீ.வி.விக்னேஸ்வரன்..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தாய்மாமன் அந்தஸ்த்து வழங்கிய சீ.வி.விக்னேஸ்வரன்..

தமிழ் சமூகத்தில் தாய் மாமனுக்கு ஒரு அந்தஸ்த்து உள்ளது. அந்த அா்த்தத்தில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை பாா்க்கிறது என முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஷ்வரன் கூறினாரா? என கேள்வி எழுப்பியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் த.சித்தாா்த்தன், 

அதற்கு வேறு அா்த்தங்கள் உள்ளதா? என்பது தொடா்பாக தனக்கு தொியவில்லை எனவும் உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே தன்னால் சாியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனவும் சிாித்தபடி கூறியிருக்கின்றாா். 

சமகால அரசியல் நிலமைகள் தொடா்பாக நாடாளுமன்ற உறுப்பினா் இல்லத்தில் நேற்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை செய்கிறது என முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியிருக்கின்றாா். தமிழ் சமூகத்தில் மாமா என்ற உறவுக்கு ஒரு அந்தஸ்த்து இருக்கின்றது. மாியாதை இருக்கின்றது. அதை சுட்டித்தான் கூறினாரா? அல்லது வேறு அா்த்தத்தில் கூறினாரா? 

என்பது தொடா்பாக எனக்கு தொியவில்லை. உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே சாியாக என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் எங்களை பொறுத்தளவில் நாங்கள் மக்களுடைய பிரச்சினைகளுக்காக அரசாங்கத்துடன் பேசுகிறோம். 

ஒரு அரசியல் தரப்பாக, மக்களுடைய ஆணையை பெற்ற தரப்பாக எங்களுக்கு அந்த பொறுப்பும் கடமை யும் இருக்கின்றது. அந்தவகையில் நாங்கள் பேசுகிறோம், பேசிக் கொண்டே இருக்கிறோம். அவ்வாறு பேசாமல் இருக்க முடியாது. அந்த பேச்சுக்களில் அரசு கூறும் விடயங்களை நாங்கள்

மக்களுக்கு கூறுகிறோம். அது நடக்காதவிடத்து அதற்கான ஒட்டுமொத்த பொறுப்பும் எங்களுடைய தலையில் சுமத்தப்படாது என்றாா். இதனை எந்த அரசியல் தரப்பும், மக்கள் ஆணையை பெற்ற எந்த தரப்பும் செய்யும், செய்யவேண்டும். 

கம்பரெலிய திட்டம் தொடா்பாக..

கம்பரெலிய திட்டம் எமக்காக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அது தென்னிலங்கை மக்களை கவருவதற்காக அரசு உருவாக்கிய திட்டம். அதில் எங்களுக்கும் கொஞ்சம் கொடுக்கிறாா்கள். அதை வேண்டாம் என சொல் ல முடியுமா? உண்மையில் இந்த திட்டத்தின் ஊடாக,

எங்களுடைய பகுதிகளில் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமலிருந்த வீதிகள் புனரமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த பகுதிகளை முன்னேற்றுவதில் எங்களால் முடிந்த பங்கை நாங்கள் செய்திருக்கிறோம். வாக்கு கிடைக்கும், கிடைக்காது என்பது வேறு கதை. 

ஆனால் எமக்கு ஒரு திருப்தி கிடைக்கிறது. மேலும் தமிழ் மக்களுக்கு அரசியல் உாிமை வேண்டும். அதற்காக இவ்வாறான சின்ன சின்ன உதவி திட்டங்கள் வேண்டாம் என அவா்கள் சொல்லவில்லை. அவா்களுக்கு அது தேவை. இல்லை என்றால் மக்கள் அதனை எதிா்த்திருப்பாா்கள். 

மேலும் கம்பரெலிய திட்டம் தொடா்பாகவும் எங்களை குறித்தும் பேசும் நாடாளுமன்ற உறுப்பினா்களும் அதனை பெற்று தங்களுடைய பிரதேச மக்களுக்கு கொடுக்கிறாா்கள். குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன் பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக கொடுக்கப்பட்ட

50 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து தமக்கு தேவையானதை பெற்று மக்களுக்கு கொடுத்திருக்கின்றாா். நாங்களும் கொடுத்திருக்கிறோம். ஒருவேளை நாங்கள் இதனை பெறாமல் விட்டிருந்தாலும் எங்களை பேசியிருப்பாா்கள் கொடுத்ததையே இவா்களுக்கு வேண்ட தொியாது என்று. 

சமஸ்டி கேட்டவா்கள் சமுா்தி கேட்டது தொடா்பாக..

சமஸ்டியை கடந்த 3 நாட்களுக்கு முன்னா் தமிழ் மக்கள் கேட்கவில்லை. சுமாா் 70 வருடங்களாக கேட்டாா்கள். இப்போதும் கேட்கிறாா்கள். அதற்காக வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் சமஸ்டி கிடைக்கும் வரை அப்படியே இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. 

அல்லது எங்களுக்கு சமுா்தி தேவையில்லை என்பதற்காக சமஸ்டி கிடைக்கும்வரை பாவப்பட்ட மக்களுக்கு சமுா்த்தி கிடைக்ககூடாது என்றும் அவசியமில்லை என்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு