SuperTopAds

தெரிவுக்குழு முன் ஆஜராகமாட்டேன்!- ஜனாதிபதி

ஆசிரியர் - Admin
தெரிவுக்குழு முன் ஆஜராகமாட்டேன்!- ஜனாதிபதி

நாட்டில் அரசியல் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்மைக்கு 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமு காரணம் என்றும், இதன் காரணமாக நாட்டில் இரண்டு தலைவர்கள் உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதியாக யார் வந்தாலும் நாட்டை நேசிப்பவராக இருந்தால் 19ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நீக்கப்படுமாக இருந்தால் அதுவே நாட்டுக்கு சிறந்தது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ள இராணுவ உடன்படிக்கைக்கு (சோபா) தான் முற்றாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்ய நியமித்துள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜராக தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், தான் ஒருபோதும் அங்கு ஆஜராகப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தத் தெரிவுக்குழு அலரி மாளிகையால் கதை எழுதப்பட்ட ஒரு நாடகம் என்று ஜனாதிபதி கூறினார்.