மரண தண்டணை வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டாா் ஜனாதிபதி..! 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டணை..
போதை பொருள் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டணை வழங்கும் உத்தரவில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா தொிவித்துள்ளாா்.
மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். சோபா உடன்படிக்கை மற்றும் அமெரிக்க இராணுவம் இலங்கையில் நிலைகொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும்
உடன்படிக்கைகளைத் தாம் முற்றாக எதிர்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமைச்சரவையிலும் தாம் இந்த உடன்படிக்கைகளை எதிர்த்ததாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் தற்போது நடைபெறும் சந்திப்பில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி 19ஆம் திருத்தச்சட்டத்ததை இரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை நிறைவேற்றத் தவறினால் நாட்டை முன்னோக்கி இட்டுச்செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்துவதற்கு தாம் நடவடிக்கை எடுத்துவருவதாக வௌியான தகவல்
உண்மைக்குப் புறம்பானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு 2 மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் தற்போது நடைபெறும் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.