உடல் எடையை குறைக்க உதவும் வெண்டைக்காய்!

ஆசிரியர் - Admin
உடல் எடையை குறைக்க உதவும் வெண்டைக்காய்!

இந்தியாவின் முக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்று வெண்டைக்காய் ஆகும். வட இந்தியாவிலும் சரி, தென்னிந்தியாவிலும் சரி சமைக்கும் முறைகள் வேறுபட்டாலும் வெண்டைக்காய் என்பது அவர்களின் அத்தியாவசிய உணவுப்பொருள்களில் ஒன்றாக இருக்கிறது. 

இதில் இருக்கும் மருத்துவ குணங்களுக்காக வெண்டைக்காய் உலகம் முழுவதும் பல நாடுகளில் முக்கிய உணவுப்பொருளாக விளங்குகிறது. வெண்டைக்காய் பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் அதனை சாப்பிட்டால் மூளை நன்கு வளரும் என்பதுதான். ஆனால் உண்மையில் வெண்டைக்காய் நமக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும். அதில் முக்கியமான ஒன்று எடை குறைப்பு ஆகும். இந்த பதிவில் எடையை குறைக்க வெண்டைக்காயை ஏன் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

ஊட்டச்சத்துக்கள்

வெண்டைக்காயில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதுடன் போதுமான அளவு நார்ச்சத்துக்களும் உள்ளது. 100 கிராம் வெண்டைக்காயில் 33 கலோரிகளும், 7 கிராம் கார்போஹைட்ரேட்டும், 2 கிராம் புரோட்டினும் உள்ளது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். வெண்டைக்காய் எப்படி எடை குறைப்பிற்கு உதவுகிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அதிகளவு நார்ச்சத்துக்கள்

வெண்டைக்காயில் இருக்கும் நார்ச்சத்துக்கள் உங்களின் பசியுணர்வை நீண்ட நேரத்திற்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் எளிதில் செரிமாணமடையது எனவே இது நமது உடலில் வேகமாக பரவுவதுடன் நமது இரத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். இந்த நார்ச்சத்துக்கள் நம்முடைய குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துகிறது. இதனால்தான் பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்கள் எடை குறைப்பிற்கு நார்ச்சத்துள்ள உணவுகளை பரிந்துரைக்கிறார்கள். இந்த நார்ச்சத்துக்கள் எடை குறைப்பிற்கு உதவுவதுடன் இரைப்பை செயல்பாடுகள் சீராக இருக்கவும் உதவுகிறது.

கலோரிகளின் அளவு

வெண்டைக்காய் கலோரிகள் குறைவாக இருக்கும் காய்கறிகளில் ஒன்றாகும் மேலும் இதில் எந்தவித நிறைவுற்ற கொழுப்பும் இல்லை. இதனால்தான் இது எடை குறைப்பிற்கு மிகச்சிறந்த ஒன்றாக பரிந்துரைக்கப்படுகிறது. வெண்டைக்காயை உங்கள் உணவில் சேர்த்து கொள்வது உங்களை சரியான எடையை பராமரிக்க உதவுகிறது.

குறைந்த கிளைசெமிக் குறியீடு

வெண்டைக்காயில் இருக்கும் க்ளெசமிக்கின் அளவு மிகவும் குறைவாகும். இது நமது உடலில் இருக்கும் குளுக்கோஸ் அளவு மீது குறைவான பாதிப்பையே உண்டாக்கும். இதனால் இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மிகச்சிறந்த உணவாகும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட எடையை பற்றி கவலைப்படாமல் வெண்டைக்காயை சாப்பிடலாம்.

குறைவான கொழுப்பு

வெண்டைக்காயில் இருக்கும் கொழுப்பின் அளவு 1 சதவீதத்திற்கும் குறைவானதாகும். உங்கள் உடலில் கலோரிகளின் அளவை அதிகரிப்பது கொழுப்புதான். எனவே அது குறைவாக இருக்கும் வெண்டைக்காயை சாப்பிடும்போது உங்கள் உடலில் கலோரிகளின் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை. இதனால் உங்கள் உடல் எடை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

செரிமானத்தை ஊக்குவிக்கும்

உங்கள் டயட்டில் வெண்டைக்காயை சேர்த்து கொள்வது உங்கள் செரிமான மண்டலத்தை பலப்படுத்தும். இதற்கு காரணம் இதிலிருக்கும் நார்ச்சத்துக்கள்தான். இது செரிமான பாதையில் மொத்தமாக நகர்ந்து செல்லும். வெண்டைக்காய் சாப்பிடுவதால் மலசிக்கல், வீக்கம், வாயுக்கோளாறு, பிடிப்புகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு