SuperTopAds

15 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உயிாிழந்தாா்..

ஆசிரியர் - Editor I
15 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உயிாிழந்தாா்..

லக்ஸ்மன் கதிா்காமா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 15 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி சுகயீனம் காரணமாக உயிாிழந்துள்ளாா். 

அவரது உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பொரளை, வனாத்துவில்லு சிறிசரஉயன வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த 

முத்தையா சகாதேவன் (62) என்பவரே உயிரிழந்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் 2005 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் இரண்டு வாரங்களாக 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.