சொகுசு பேருந்துகளின் சேவை 27ம் திகதி தொடங்கப்படும்..!

ஆசிரியர் - Editor
சொகுசு பேருந்துகளின் சேவை 27ம் திகதி தொடங்கப்படும்..!

இலங்கை போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்துவதற்காக புதிதாக வாங்கப்பட்ட சொகுசு பேருந்துகள் 27ம் திகதி பொதுமக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. 

தற்சமயம் ஒன்பது பஸ் வண்டிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மேலும் 37 பஸ் வண்டிகள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

ஒரு பஸ்ஸின் பெறுமதி சுமார் 17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும். மேலும், கட்டுபெத்த, மஹரகம, பொலன்னறுவை, மாத்தளை போன்ற பகுதிகளுக்காக 

பஸ் சேவை நிலையங்களில் இந்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

Radio
×