சீ.வி.விக்னேஷ்வரனின் தரங்கெட்ட வாா்த்தைகளுக்கு கூட்டமைப்பு காது கொடுக்காது..
ஆட்சியாளா்கள் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சோ்ப்பது மாமா வேலையா..? என கேள்வி எழுப்பியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன்,
முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஷ்வரனின் தரங்கெட்ட வாா்த்தைகளுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு காது கொடுக்கப்போவதில்லை எனவும் அவா் கூறியிருக்கின்றாா்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன்.கல்முனை வடக்கு பிரதேசசபை விவாகரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்கின்றது என விக்கினேஸ்வரன் கூறியிருந்த நிலையில்,
அதற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தமிழர்களின் உரிமை, அதை தடுக்க முஸ்லிம்களிற்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதுமே முன்னின்று செயற்பட்டு வருகின்றது. இன்றுவரை வடக்கு கிழக்கில்
தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டுள்ள தமது உரிமைகளுக்கு எமது தலையீடுகள் பிரதான காரணம் என்பதை மறந்துவிட கூடாது. விக்னேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ்மட்டத்தில் வீழ்ந்துள்ளார்
என்பது நன்றாக வெளிப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் தலைமைகள் அனாவசியமாக தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவே நாம் கருதுகின்றோம்.
கல்முனை வடக்கு நிலத்தொடர்பு கொண்ட பிரதேசம். அதுமட்டும் அல்ல இது தமிழர்கள் வாழும் பகுதி. இதில் புதிதாக எல்லை நிர்ணயம் ஒன்றினை செய்ய வேண்டிய எந்தவித தேவையும் இல்லை.
கல்முனை தெற்கு பிரதேச செயலகம் நிலத்தொடர்பு இல்லாததது. இதில் தான் எல்லை நிர்ணயங்கள் செய்தாக வேண்டும். இது அவர்களின் பிரச்சினை, இதனை தீர்க்க தெரிவுக்குழு அமைத்துக் கொள்வதும் நடவடிக்கை எடுப்பதும்
அவர்களின் பிரச்சினை. ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் அனாவசியமாக முஸ்லிம் பிரதிநிதிகள் தலையிட்டு தமிழர்களின் பிரச்சினைகளை குழப்புவது கண்டிக்கத்தக்கது.
கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு முஸ்லிம்கள் போராடுவதில் நியாயம் இருக்கிறது ஆனால் தமிழர்களுக்கு கொடுக்க வேண்டாம் என கூறுவதற்கு அவர்களு எந்த அதிகாரமும் இல்லை.
இந்த விடயத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில் நாம் கண்டிப்பாக தெரிவித்து வருகின்றோம்.விரைவில் இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்தில் இருந்து
கணக்காய்வாளர் கல்முனை வடக்கு செயலகத்தில் தனது கடமைகளை ஆரம்பிப்பார் என்றார்.