இராணுவத்தினரை கொலை செய்த வழக்கு..! முன்னாள் போராளிகள் நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டனா்..

ஆசிரியர் - Editor
இராணுவத்தினரை கொலை செய்த வழக்கு..! முன்னாள் போராளிகள் நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டனா்..

இலங்கை இராணுவத்தின் அதிகாாிகள் உள்ளடங்கலாக 26 போரை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் 3 போ் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டனா். 

போாில் கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை தடுத்து வைத்திருந்து, கொலை செய்து எரியூட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் மூன்று முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 

இக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று குறித்த வழக்குகளிற்காக குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் பலத்த பாதுகாப்புடன் பொலிஸாரினால் 

வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Radio
×