கல்முனைப் போராட்டக் களத்துக்கு செல்கிறார் விக்கி!

ஆசிரியர் - Admin
கல்முனைப் போராட்டக் களத்துக்கு செல்கிறார் விக்கி!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், போராட்டக் களத்திற்கு இன்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி கடந்த திங்கட்கிழமை முதல் மதத்தலைவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து நேற்று போராட்டக்களத்திற்கு வந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஓரிரு நாட்களில் இந்த பிரச்சினைக்கு முடிவு வழங்குவதாக தெரிவித்தார். அத்தோடு போராட்டத்தையும் தற்காலிகமாக கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.

அவர் வழங்கிய உறுதிமொழியை ஏற்று போராட்டக்காரர்கள் நீராகாரம் அருந்தி போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். எனினும் அதன் பின்னர், சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென அறிவித்தனர். அதற்கமையவே இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு