முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 22ம் திகதி..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 22ம் திகதி..

முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய 2019ஆம் ஆண்டிற்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, 24.06.2019 நாளை இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவில், மாவட்ட மற்றும் பிரதேச ரீதியிலான அபிவிருத்திக்குழுக் கூட்டங்கள் இடம்பெறுவதில்லை எனவும், 

இதனால் மாவட்டம், மற்றும் பிரதேசம் சார்ந்த அபிவிருத்தி வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாவும், 

முல்லை மாவட்டம் சார்ந்த பொது அமைப்புகள் பலவும் கடந்த சில மாதங்களாக தமது கருத்துக்களைத் தெரிவித்துவந்தன.

இந் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அன்று முல்லை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது இடம்பெறுவதாகவிருந்தது.

எனினும் ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக முல்லை மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இடம்பெறவில்லை.

இந் நிலையிலேயே நாளைய நாள் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இடம்பெறவிருக்கின்றது.

இந்த ஆண்டிற்கான முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம் என்பதால், நாளைய தினம் அபிவிருத்தி சார்ந்து பல்வேறுபட்ட காரசாரமான விவாதங்கள் கூட்டத்தில் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு