தமிழ் சிங்கள வர்த்தகர்கள் ஒன்றிணைந்து சங்கம் ஒன்றை உருவாக்குங்கள்.. கேட்பது அத்துரலிய ரத்தின தேரர்..

ஆசிரியர் - Editor I
தமிழ் சிங்கள வர்த்தகர்கள் ஒன்றிணைந்து சங்கம் ஒன்றை உருவாக்குங்கள்.. கேட்பது அத்துரலிய ரத்தின தேரர்..

தமிழ் வர்த்தகர்களும் சிங்கள வர்த்தகர்களும் இணைந்து தனியாக வர்த்தக சங்கம் ஒன்றை உருவாக்கவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் கூறியிருக்கின்றார். 

திருகோணமலை - குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ், சிங்கள வியாபார சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கு எதிராக இருக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற நாட்டின் முன்னேற்றத்தை விரும்புகின்ற முஸ்லிம் மக்களையும் நாங்கள் எம்முடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தெற்காசியாவில் மிக முக்கியமான இடமாக கிழக்கு மாகாணமும் அதிலும் மிக முக்கியமாக திருகோணமலையும் காணப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகின்ற இயற்கை துறைமுகத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பான கலந்துரையாடல் நாளை 24ம் திகதி நடைபெற உள்ளது. இதன்போது மதத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் இதிலே இது தொடர்பான விடயங்கள் பேசப்பட உள்ளது.

இதேவேளை சீனாவில் உள்ள கூட்டுறவு வங்கி முறைமையை இலங்கையிலும் உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்டால் வியாபாரிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வியாபாரிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து மூன்று தசாப்தங்களாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தங்களுடைய 

வியாபாரத்தை உயர்த்துவதற்காக எவ்வாறான வழிகளை செய்ய வேண்டும் எனவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவான வியாபாரம் செய்யக்கூடியவர்கள் முஸ்லிம்களாக காணப்படுகின்றார்கள். எங்களுக்கு வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது.

அவர்கள் நாங்கள் விற்கும் விலையை விட குறைவான விலைக்கு விற்கிறார்கள் எனவும் அதனால் மக்கள் அவர்களையே தேடி செல்வதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பியந்த பத்திரன, மற்றும் மொட்டு சின்னத்தின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தயானந்த ஜெயவீர மற்றும் திருகோணமலை 

நகர சபையின் பொது ஜன பெரமுன மொட்டு அணியைச் சேர்ந்த சுசந்த ஜெயலத் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு