SuperTopAds

கடற்றொழிலாளா்களுக்கு எச்சாிக்கை..!

ஆசிரியர் - Editor I
கடற்றொழிலாளா்களுக்கு எச்சாிக்கை..!

இலங்கை முழுவதும் காற்றின் வேகம் அதிகாித்துள்ளது எனவும் மீனவா்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக செயற்படுமாறும் வாளிமண்டலவியல் திணைக்களம் எச்சாித்துள்ளது. 

காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசங்களில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அந்த கடல் பிரதேசங்களில் இடைக்கிடையே கடந்த கொந்தளிப்புகள் ஏற்படும் என திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கற்பிட்டியில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலான கடலோர பிரதேசங்களில் மணிக்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்திற்கு காற்று வீசக்கூடும்.

இது தொடர்பில் கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மிகுவம் அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.