இராணுவம் வெளியேறியும் காணி விடுவிப்பதில் அதிகாாிகள் அசமந்தம்..!
வலிகாமம் வடக்கு தையிட்டி ஜே.250 கிராம சேவையாளர் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணி விடுவிப்பதற்கு இராணுவத்தினர் வெளியேறிய போதும் காணி விடுவிப்பு இரு மாதங்களாக விடுவிக்கப்படாது தாமதப்படுத்தப்படுகின்றது.
ஜனாதிபதி ஏப் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகையின் போது விடுவிக்கப்படும் என கூறப்பட்டது. எனினும் பின்னர். ஏப் 21 குண்டு வெடிப்பினால் தாமதடைந்தது. எனினும் தற்போது நாடு வழமைக்கு திரும்பிய போதும் இதுவரை
விடுவிக்க ஏற்பாடாகி இருந்த 25 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவில்லை. கடந்த மாதம் யாழ்.இராணுவக் கட்டளைத்தளபதி நிகழ்வுஒன்றில் உரையாற்றும் போது இந்த காணி இம் மாதம் விடுவிக்கப்படும் என கூறினார்.
ஆனால் இம்மாதம் முடிவடையும் நிலையில் இதுவரை காணி விடுவிக்கப்படாது அந்த காணியில் இராணுவம் அங்கிருந்த தங்கள் தளபாடங்களை அகற்றியுள்ளபோதும் யாரும் உள்ளே செல்லாது ஒரு பகுதியில் தொடர்ந்தும்
குறிப்பிடட சில இராணுவத்தினர் பாதுகாப்பிற்காக அக் காணியில் உள்ளனர். இவ்வாறு காங்கேசன்துறை கொலிச் றோட் வீதியில் உள்ள காணி உரிமையாளர்களின் வீடுகளிலும் இராணுவத்தினர் வெளியேறியதால்
இராணுவத்தினர் இல்லாத சமயம் பார்த்து திருடர்கள் சென்று தமது வீட்டு தளபாடங்கள் ஓடுகளை திருடிச் செல்வதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.இந்த காணியை விடுவிக்க வலி.வடக்கு பிரதேச செயலர்,
அரச அதிபர் ஏன் இராணுவ உயர் அதிகாரியுடன் பேசி காணியை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கிறார்கள் இல்லை என காணி உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தொடர்ந்தும் ஏமாற்றாது மாத இறுதிக்குள் காணியை விடுவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோருகின்றனர்.