ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிராக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியர் - Admin
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிராக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகையைக் கண்டித்து திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநரது செயலகத்திற்கு முன்பாக திருகோணமலை மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை கடற்படைத் தளத்தில் இன்று மாலை நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தாம் தமது உறவுகளை தொலைத்துவிட்டு இதுவரை காலமும் தேடிவருவதாக தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தமக்கான தீர்வினை ஜனாதிபதி உடன் பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘ஜனாதிபதியே வாருங்கள் எமக்கான தீர்வைத்தாருங்கள்’, ‘திருகோணமலையில் கால் பதிக்கும் ஜனாதிபதியே எம் கண்ணீருக்கு தீர்வு என்ன?’ எனும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Radio
×