SuperTopAds

அரச புலனாய்வு பிாிவின் பிரதானிகளை இனி நெருங்க முடியாத தொிவுக்குழு..! நினைத்ததை சாதித்த மைத்திாி..

ஆசிரியர் - Editor I
அரச புலனாய்வு பிாிவின் பிரதானிகளை இனி நெருங்க முடியாத தொிவுக்குழு..! நினைத்ததை சாதித்த மைத்திாி..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடா்பாக ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற தொிவுக்குழு முன்னிலையில் அரச புலனாய்வு பிாிவின் பிரதானிகளை அழைப்பதில்லை. என தொிவுக்குழு தீா்மானித்துள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் விடுத்த விசேட கோரிக்கை காரணமாக இந்த தீரமானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் கூறுகின்றன.

புலனாய்வு பிரிவுகளின் பிரதானிகளிடம் விசாரணை நடத்த வேண்டாம் என ஜனாதிபதி கோரிக்கை விடுப்பதற்கு முன்னர், அரச புலனாய்வு சேவையின் பிரதானி நிலந்த ஜயவர்தன, புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி 

பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர போன்ற உயர்மட்டப் புலனாய்வு அதிகாரிகளை அழைத்து விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு தீர்மானித்திருந்தது.

முன்னதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் புலனாய்வு அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்துவதனால் நாட்டின் புலனாய்வுத் தகவல்கள் வெளியே செல்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததுடன், 

ஜனாதிபதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.