ஆங்காங்கே பொருத்தப்படும் கம்பங்கள் எதற்காக..? குழப்பத்தில் யாழ்.மக்கள்..

ஆசிரியர் - Editor I
ஆங்காங்கே பொருத்தப்படும் கம்பங்கள் எதற்காக..? குழப்பத்தில் யாழ்.மக்கள்..

யாழ்.மாநகரசபை எல்லைக்குள்ளும் மாநகரசபை எல்லைக்கு வெளியிலும் SMART LAMP POLL என்னும் பெயரில் ஒரு மிகவும் உயரமான கம்பங்கள் நடப்படுகின்றது. இது ஏன் அமைக்கப்படுகிறது? இதன் நன்மை தீமை குறித்து எந்தவொரு விளக்கமும் இல்லாத நிலையில் மக்கள் பொிதும் குழப்பமடைந்துள்ளனா். 

4G, 5G க்கு என சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த கம்பம் பல இலட்சம் செலவில் தனியாக மின்குமிழக்கும் கண்காணிப்பு காமராக்கும் பொருத்தப்படுமா?  ஆகவே இதில் பொருத்தப்படுவதாக சொல்லப்படும் தொலைதொடர்பு சாதனங்களின் சாதக பாதக அம்சங்கள் குறித்து 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சபை உறுப்பினர்கள் சபையில் கேட்டபோதும் அதனை வழங்காமல் அவசர அவசரமாக வேலை நடக்கிறது. இந்த கோபுரத்தினால் கோபுரம் உள்ள அப்பகுதி மக்கள் பாதிக்கப் போகிறார்கள்.

ரெலிகொம் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் கூறும்போது..

4G தொழில்நுட்பம் ஒரு தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து அதிகளவு 2KM மட்டுமே வேலை செய்யும். ஆனால் 5G தொழில்நுட்பம் ஒரு தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து அதிகளவு 1 KM மட்டுமே வேலை செய்யும். ஆனால் இலங்கையில் தொலை தொடர்பு ஆணைக்குழு புதிய தொலை தொடர்பு 

கோபுரங்கள் அமைப்பதற்கு இப்பொழுது ஒருவருக்கும் அனுமதி வழங்குவதில்லை. அதனால் தான் ஸ்மார்ட் லாம்ப் என்ற பெயரில் டயலாக் நிறுவனம் சிக்னல் வராத மற்றும் இல்லாத, நெட்ஒர்க் பிஸியான இடங்களுக்கு கொண்டு வந்தார்கள். பாரம்பரிய தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு 8 இடங்களில் அனுமதி 

பெற வேண்டும். மக்கள் போராட்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். ஆனால் ஸ்மார்ட் லாம்ப் 2 இடங்களில் பெறுகின்ற அனுமதியுடனன் இரு இரவுகளில் பொருத்திவிட முடியும். மற்றும் இந்த ஸ்மார்ட் லாம்ப் தூணில் உள்ளே 2G, 3G, 4G, 5G Repeaters fix பண்ண முடியும். 

முதலாவது phase 22 ஸ்மார்ட் லாம்ப் யாழ்ப்பாணத்தில் நிறுவுகிறார்கள். இதனை Sierra நிறுவனம் செய்து கொண்டு இருக்கிறது. ஏனைய மாவட்டங்களிலும் நிறுவுகிறார்கள். நான் அறிந்த வகையில் 5G இற்க்கான அடித்தளம் போடுகின்றார்கள். என கூறுகிறார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு