ஓமந்தையில் இரு வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்து..! மருத்துவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
ஓமந்தையில் இரு வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்து..! மருத்துவா் படுகாயம்..

ஓமந்தை பகுதியில் இரு வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவா் ஒருவா் படுகாயமடைந்துள்ளாா். 

இந்த விபத்து வவுனியா ஓமந்தை ஏ9 பிரதான வீதியில் நடந்துள்ளது. திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த காரும், 

ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் காரில் பயணித்த திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் படுகாயமடைந்தார். 

அவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு