SuperTopAds

அமெரிக்காவின் பழமைவாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து!

ஆசிரியர் - Admin
அமெரிக்காவின் பழமைவாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து!

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள பழமைவாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இன்று அதிகாலை தீவிபத்துக்குள்ளானது. அங்கு 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

ஆலையின் ஒரு பகுதி தீயில் பற்றி எரிந்து வரும் நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் மீட்பு குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளொன்றுக்கு 335,000 பேரல் எண்ணெய் உற்பத்தி செய்யும் இந்த ஆலையில், ஆயிரத்துக்கு அதிகமான ஊழியர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாக நிலையில், தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வரும் போலீசார், ஆலை அமைந்துள்ள பகுதி கடும் புகை மூட்டத்துடன் இருப்பதால், அந்த வழியாக வாகனம் செல்ல தடை விதித்துள்ளனர். மேலும் அப்பகுதி மக்களும், அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.