நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன் மீது தாக்குதல் முயற்சி..! கல்முனையில் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன் மீது தாக்குதல் முயற்சி..! கல்முனையில் பதற்றம்..

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயா்த்துவது தொடா்பாக பிரதமாின் செய்தியுடன் கல்முனைக்கு சென்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனையும், வேறு சிலரையும் பொதுமக்கள் தாக்கியுள்ளனா். 

பிரதமரின் செய்தியை தாங்கி கற்பிட்டிமுனை சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன், தயாகமகே ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் போராட்ட களத்தை சென்றடைந்தனர்.

இதன்போது, பிரதமரின் செய்தியினை சுமந்திரன் வாசித்துக் காட்டியதாகவும், இதன்போது, சுமூகமாக இருந்த நிலை அமைச்சர் தயாகமகே பேசியதன் பின்னர் முறுகல் நிலையடைந்ததாகவும்,

 இதனையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 

நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோருடன் அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டகாரர்களுடன் கலந்துரையாடினார்கள்.

அப்போது உள்நாட்டு அமைச்சரின் வாக்குறுதி வாசிக்கப்பட்ட போது தமிழ் மக்கள் கடுமையாக கொந்தளித்து தமது எதிர்ப்பை கூச்சலிட்டு வெளியிட்டதாகவும், தொடர்ந்தும் போராட்டக்காரர்களை சமாதானபடுத்த 

எடுத்த சகலமுயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் மக்களால் அரசியல்வாதிகள் அங்கிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுத்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஆத்திரமடைந்த மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட அனைவரையும் நோக்கி தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்தனர். பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் தலையிட்டு 

அவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றினர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறும் செய்திகளை தாங்கள் ஏற்கப்போவதில்லை 

என்றும் சுமந்திரன் மீது தாக்குதல் மேற்கொள்ள இதுவே காரணம் எனவும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தபடும் பட்சத்தில் இது குறித்து வர்த்தமானி வெளியிட்டதையடுத்து போராட்டம் கைவிடப்படும் 

எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு