ஐ.சி.ஆா்.சிக்கு வேண்டாத வேலை..! காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் சீற்றம்..

ஆசிரியர் - Editor I
ஐ.சி.ஆா்.சிக்கு வேண்டாத வேலை..! காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் சீற்றம்..

ஓ.எம்.பி இல் பதிவுகளை மேற்கொண்டு, பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஐ.சி.ஆர்.சி காணாமல் ஆக்கப்பட்டோரை வற்புறுத்துவதாக, முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் அமைப்பின் தலைவி மரியசுரேஸ் - ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

ஐ.சி.ஆர்.சி அமைப்பினால் எமது உறவுகளைத் தேடித்தர முடியாதெனில், எங்களுடைய மக்களுக்கு அவர்கள்ஏன் வாழ்வாதாரம் கொடுக்கவேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

உண்மையில் நாங்கள் வறுமையில்தான் வாடுகின்றோம். நாளாந்தம் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் மோசமடைந்துதான் சென்றுகொண்டிருக்கின்றது.

ஆனால் பத்துவருடங்களாக ஐ.சி.ஆர்.சி வேலை செய்தார்கள். இந்த பத்துவருடங்களில் இந்த மக்களில் இல்லாத அக்கறை ஓ.எம்.பி வரும்போது ஏன் இவ்வாறு அக்கறைப்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியாகும். என்றும் தெரிவித்தார்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர் 837வது நாளில், 20.06.2019 நேற்றைய நாள் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடுசெய்திருந்தனர்.

அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.

கடந்தகாலங்களில் நாங்கள் எங்களுடைய பதிவுகளை ஐசி ஆர்சி அமைப்பிடம் துணிவாக செய்தோம்.யாருக்கும் அந்த தகவல்கள் போய்விடக்கூடாது அவர்கள் ஊடாக எங்களுக்கு நல்லதொரு சர்வதேச அளவிலான தீர்வு கிடைக்கும் 

என்ற நம்பிக்கையில் பதிவுகள் செய்யப்பட்டு இன்று வரையில் அவர்களிடம் அந்த பதிவுகள் இருக்கின்றது.

தற்பொழுது எட்டு, ஒன்பது மாதங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐசிஆர்சி மிக தீவிரமாக வேலை செய்து வருகின்றது அவர்கள் வேலை செய்வது எமக்கு பிரச்சினையில்லை.

அவர்கள் ஓ.எம்.பி என்ற அலுவலகத்திற்கு ஆதரவாக வேலை செய்வது எங்களுக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. 

ஓ.எம்.பி க்கு ஆதரவாக யாருமே செயற்படக்கூடாது என்று நாங்கள் தெளிவாக ஊடகங்களிலே கடந்த காலங்களில் கூறியிருந்தோம். அதேவேளை பாதிக்கப்பட்ட நாங்கள் தான் அதை சொல்கின்றோம்.

ஆனால் அவர்கள் இரகசியமான முறையிலேயே கிராமம் கிராமங்களாக மக்களை கூப்பிட்டும், மாவட்ட ரீதியிலும் மக்களை கூப்பிட்டும், தீவிரமாக வேலை செய்வது என்பது எங்களுக்கு சந்தேகமாயிருந்தது. 

சில விடையங்களை நேரடியாக அவர்களிடம் கதைத்திருந்தோம். ஓ.எம்.பி க்கு ஆறாயிரம் ரூபாய் பணம் வருவது என்பது உண்மைதான். ஆனால் ஓ.எம்.பி அந்த பணத்தினை யாருக்கும் கட்டாயமாக 

திணிக்கக் கூடாது என்பதை நேரடியாகவே ஓ.எம்பி தலைவருக்கும் கூறியிருக்கின்றோம்.

ஐ.சி.ஆர்.சி அமைப்பினால் எமது உறவுகளைத் தேடித்தர முடியாதெனில், எங்களுடைய மக்களுக்கு அவர்கள்ஏன் வாழ்வாதாரம் கொடுக்கவேண்டும்.

உண்மையில் நாங்கள் வறுமையில்தான் வாடுகின்றோம். நாழாந்தம் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் மேசமடைந்துதான் சென்றுகொண்டிருக்கின்றது.

ஆனால் பத்துவருடங்கள் ஐ.சி.ஆர்.சி வேலை செய்தவர்கள் இந்த பத்துவருடங்களில் இந்த மக்களில் இல்லாத அக்கறை ஓ.எம்.பி வரும்போது ஏன் இவ்வாறு அக்கறைப்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியாகும்.

ஓ.எம்.பி இல் கட்டாயம் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். பணத்தைப் பெறவேண்டுமென்பதை நாங்கள் பிழையாக கருதுகின்றோம். நாங்கள் யாருடைய காசுக்காகப் போராடுகிறோம் அறிவுடையோர் 

தூண்டுதலை போராடுகிறோம் கூறி மக்களை பிளவுபடுத்துகிறது வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் இது மிகவும் ஒரு கஷ்டமான ஒரு துன்பகரமான விடயம் நாங்க உண்மையாகவும் நேர்மையாகவும் துணிச்சலுடனும் எங்களுடைய உயிர் போனாலும் பரவாயில்லை என்ற இன்று இந்த போராட்டத்தை செய்கின்றோம்.

இந்த ஐ.சி.ஆர்.சி தன்னால் முடிந்தால் எங்களுடைய உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை மாத்திரம் கேட்டு சொன்னால் போதும்.

எங்களை அவர்கள் துரோகத்தனமாக கதைக்கிறார்கள். நாங்கள் இந்த போராட்டத்திற்கு வந்து இந்த இரண்டு வருடமாக பல அழுத்தங்களை சந்தித்து வந்திருக்கின்றோம். அந்த அழுத்தங்களினால் நானும் பிள்ளைகளும் தற்கொலை செய்துகொள்வதே தற்போதைய நிலையில் எண்ணத் தோன்றுகின்றது.

உண்மையில் நான் எனது கணவருக்காகவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டேன். எங்களை வீணாக மனஸ்தாப படுத்தி, நாங்கள் சம்பளத்திற்கு வேலை செய்ததாக, இல்லாவிட்டால் நாங்கள் வேறு யாருடைய தூண்டுதலில் இருப்பதாக 

மக்களிடம் கூறுவதை விடுத்து, இந்த ஐ.சி.ஆர்.சி அமைப்போ, அல்லது வேறு நிறுவனங்களோ சரி பாதிக்கப்பட்ட எங்களுக்கு உண்மையான தீர்வினை எடுத்துத் தர வேண்டும் என நான் மனம் உடைந்து பேசுகின்றேன்.

வீட்டில் பிள்ளைகள் பட்டினியோடு இருக்கிறார்கள். எங்களுடைய பிள்ளைகள் படிப்பதற்கு எந்த உதவிகளும் இல்லை. 

நாங்கள் எங்களுடைய உறவினர்களை தேடுகிறோம் என்பதற்காகவோ என்னவோ நாங்கள் ஒதுக்கப்பட்டு கொண்டே வருகிறோம்.

இப்படி காணாமல் போன உறவுகளை பிரித்துப் பிரித்து சூறையாடுகின்றனர், அரசுக்கு கீழ் விலை போய்க்கொண்டிருப்பவர்கள். நாங்கள் இந்த அரசிடம்தானே எமது உறவுகளைக் கையளித்தோம். 

எங்களுக்கு உண்மையான நீதி வேண்டும்.நான் செத்தால் கூட இந்த ஐ.சி.ஆர்.சிதான் பொறுப்புக்கூறவேண்டும். என்றார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு