SuperTopAds

நீதிமன்றிலேயே மக்களின் பொருட்களுக்கு பாதுகாப்பில்லை..! பொலிஸாா் அசமந்தம்..

ஆசிரியர் - Editor I
நீதிமன்றிலேயே மக்களின் பொருட்களுக்கு பாதுகாப்பில்லை..! பொலிஸாா் அசமந்தம்..

பருத்துறை நீதிவான் நீதிமன்றுக்கு செல்வோாின் வாகனங்கள் மற்றும் வாகனங்களில் வைக்கப்படும் பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவும் அவை திருடப்படுவதாகவும் தொிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் காவல்துறையினர் அசமந்தமாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். பருத்தித்துறை நீதிமன்றுக்கு செல்வோர் வாகன பாதுகாப்பு நிலையம் இல்லாமையால், 

தமது மோட்டார் சைக்கிள்களை நீதிமன்றுக்கு வெளியே நிறுத்தி விட்டு செல்கின்றனர். அதிலையே தமது தலைக்கவசங்களை வைத்து விட்டு செல்கின்றனர். அவ்வாறு வைத்து விட்டு செல்லப்படும் தலைக்கவசங்கள் திருடப்பட்டு வருகின்றன. 

வழக்குகள் முடிந்து வீடு செல்லும் போது , தலைக்கவசங்கள் திருட்டு போயுள்ளமையால் , தலைகவசம் இல்லாமல் வீதியில் பயணிக்கும் போது காவல்துறையினர் மறித்து தண்டம் எழுதுகின்றார்கள். 

தலைக்கவசம் திருட்டு போனமை தொடர்பில் முறைப்பாட்டையும் காவல்துறையினர் ஏற்க தயாராக இல்லை. தாம் தலைக்கவசத்தையும் திருட்டு கொடுத்து , தலைக்கவசம் இல்லாமையால் 1000 ரூபாய் தண்ட பணத்தினையும் 

செலுத்தும் நிலையில் உள்ளோம். என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்பாக நீதிமன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளின் 

இருக்கையை உடைத்து அதனுள் இருந்த ஒரு தொகை பணம் திருடப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.பருத்தித்துறை நீதிமன்றுக்கு முன்பாகவே பருத்தித்துறை காவல் நிலையமும் காணப்படும் நிலையிலையே 

அப்பகுதியில் இவ்வறான தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அது தொடர்பில் எந்த விதமான நடவடிக்கையையும் காவல்துறையினர் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர் தெரிவிக்கையில் , நீதிமன்ற வாளகத்தினுள் வாகன பாதுகாப்பு நிலையத்தை அமைக்கும் அளவிற்கு இட வசதி இல்லை அதனால் , 

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வாகன பாதுகாப்பு நிலையத்தினை அமைக்குமாறு பருத்தித்துறை நகர சபையிடம் கோரியிருந்தோம். அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அது தொடர்பில் நகர சபை தவிசாளர் தெரிவிக்கையில் , வாகன பாதுகாப்பு நிலையம் அமைப்பதற்கான இடத்தினை பெறுவதில் சிரமங்கள் உள்ளன. நீதிமன்றுக்கு அண்மையில் உள்ள காணிகள் தனியாருக்கு 

சொந்தமானவை அதனால் அவற்றை பெற முடியவில்லை. இருந்தாலும் வாகன பாதுகாப்பு நிலையம் அமைக்க ஏதுவான இடத்தினை பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். 

விரைவில் அதற்கான இடத்தினை பெற்று பாதுகாப்பு நிலையத்தினை அமைப்போம் தெரிவித்தார்.