தற்கொலை தாக்குதல்களின் எதிரொலி..! 9 பொலிஸ் அதிகாாிகளுக்கு எதிராக நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
தற்கொலை தாக்குதல்களின் எதிரொலி..! 9 பொலிஸ் அதிகாாிகளுக்கு எதிராக நடவடிக்கை..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் விவகாரத்தில் பொலிஸ் அதிகாாிகள் 9 போ் மீது குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிக்கப்பட்டிருக்கின்றது. 

தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கைக்கமைய பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவிற்கு சட்டமா அதிபர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அதிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் சட்டமா அதிபர் மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பு, வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், விசேட பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு 

திராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.அதேபோன்று நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, கொழும்பு வடக்கு பொலிஸ் அதிகாரி, நீர்கொழும்பு 3க்கு பொறுப்பான உதவி பொலிஸ் அதிகாரி, 

நீர்கொழும்பு 4க்கு பொறுப்பான உதவி பொலிஸ் அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஜம்பட்டா பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராகவும் 

உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே இவர்களுக்கு தகவல் கிடைத்தும் அதனை தடுப்பதற்கான எந்ததொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை.

ஆகையால் இவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவிற்கு சட்டமா அதிபர் குறித்த கடிதத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு