மத்திய பேருந்த நிலையத்தில் குந்திய புத்தா்..! எாிகிற வீட்டில் பிடுங்கியது லாபமாம்..
திருகோணமலை பேருந்து நிலையம் முன்பாக திடீரென புத்தா் சிலை வைக்கப்பட்ட நிலையில், சிறுபான்மை மத மக்களிடையே விசனத்தை உண்டாக்கியுள்ளதாக தொியவருகின்றது.
ஏற்கனவே மத இன ஆக்கிரமிப்புகளால் திருகோணமலை நகரமும் மாவட்டமும் தனது அடையாளங்களை இழந்து வருகின்றது. 2005ஆம் ஆண்டு சமாதான காலத்தில் திருகோணமலையில்
வைக்கப்பட்ட புத்தர் சிலையை தொடர்ந்து அங்கு பல முரண்பாடுகள் ஏற்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. திருகோணமலை நகர சபையின் அனுமதியின்றி,
அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள குறித்த புத்தர் சிலையை பிரித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் கடந்த சில நாட்களின் முன்னர் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியை ஆக்கிரமிக்க முயன்றமைக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனாலும் மாவட்டத்தில் மதநல்லிணக்கம் மீதான நம்பிக்கை பாதிக்கப்பட்டது.இதேவேளை நேற்றைய தினம் முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில்
அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அனுராதபுரத்தில் இருந்து வருவிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வடக்கு கிழக்கில் இந்து ஆலய பகுதிகளில் தமிழ் மக்களுக்கு விருப்பமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை அகற்றுவோம் என்று
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நேற்று முந்தினம் யாழ்ப்பாணத்தில் கூறியுள்ளமையும் இங்கே நினைவுகூரத்தக்கது.