தந்தை இரத்த வெள்ளத்தில் கிடந்தாா்..! காப்பாற்றுங்கள் என மன்றாடினேன்.. இங்கு யாாிடமும் மனிதாபிமானம் இல்லை.

ஆசிரியர் - Editor I
தந்தை இரத்த வெள்ளத்தில் கிடந்தாா்..! காப்பாற்றுங்கள் என மன்றாடினேன்.. இங்கு யாாிடமும் மனிதாபிமானம் இல்லை.

காலை 8.40 மணிக்கு பாாிய தீ பிளம்புடன் வெடிச்சத்தம் கேட்டது. அக்கா என அழைத்தபடி என் தங்கை ஓடி வந்தாள் அருகில் என் தந்தை இரத்த வெள்ளத்தில் கிடந்தாா். தந்தையை காப்பாற்றும்படி கதறினேன். 

எல்லோரும் புகைப்படம் எடுத்தாா்கள், வீடியோ எடுத்தாா்கள் ஆனால் என் தந்தையை காப்பாற்ற யாரும் வரவில்லை. இறுதியாக வந்த ஒருவா் முச்சக்கர வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றாா்.

வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவா் தந்தையின் மோதிரம், தொலைபேசி, பணம் ஆகியவற்றை களவாடிக் கொண்டு சென்றுவிட்டாா். இங்கு யாாிடமும் மனிதாபிமானம் இல்லை. 

இது உயிா்த்தா ஞாயிறு தாக்குதலில் தன் தந்தையை பறிகொடுத்த இளம் பெண்ணின் கதறல். உயிா்த்த ஞாயிறு தாக்குதலின் பின் நேற்று வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தில்

வழிபாட்டுக்காக வந்திருந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் ஊடகங்களுக்கு இவ்வாறு கூறியுள்ளாா். சம்பவம் தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், காலை 8.40 மணியளவில் நான் கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். 

அப்போது மிகப்பெரிய தீப்பிளம்பு தோன்றிய நிலையில் நான் கீழே விழுந்து விட்டேன். இதனையடுத்து நான் கண்களை திறந்த போது அக்கா என அழைத்து கொண்டு என்னுடைய சகோதரி என்னை நோக்கி ஓடி வந்தாள். 

நான் என்னுடைய இடதுபுறம் திரும்பி பார்த்தபோது என தந்தையின் தலையிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது. அப்போது தந்தையை தூக்கிச் செல்லுமாறு அனைவரிடமும் மன்றாடினேன். 

அவர் தலையிலிருந்து அதிகளவில் இரத்தம் வருகிறது என கூறினேன். எனினும் யாரும் எனக்கு உதவ வரவில்லை. எல்லோரும், வீடியோவும் புகைப்படங்களும் எடுத்து கொண்டிருந்தார்கள்.

கடைசியாக இருவர் வந்து தந்தையை முச்சக்கரவண்டியொன்றில் ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்றார்கள். நானும் எனது சகோதரியும் அவருடன் வைத்தியசாலைக்கு செல்லவில்லை. 

அடையாளம் தெரியாத நபரொருவர் எங்களுக்கு உதவ வந்தார். ஆனால் அந்த நபர் எனது தந்தையின் மோதிரம், கையடக்க தொலைபேசி, பணம் என்வற்றை களவெடுத்து சென்று விட்டார்.

நாம் எமது தந்தையை இழந்து விட்டோம். அத்துடன் இங்கு மனிதத்தன்மை இல்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன் என தான் பட்ட வேதனையை கதறியவாறு கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு