SuperTopAds

2வது தடவையாக இலங்கை வருகிறாா் இந்திய பிரதமா்..! நம்பிக்கை செய்தியையும் கொண்டு வருகிறாராம்.

ஆசிரியர் - Editor I
2வது தடவையாக இலங்கை வருகிறாா் இந்திய பிரதமா்..! நம்பிக்கை செய்தியையும் கொண்டு வருகிறாராம்.

உயிா்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னா் இந்திய பிரதமா் நரேந்திரமோடி இந்திய மக்களின் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு செய்தியுடன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளாா். 

இதனை இலங்கைக்கான இந்திய உயா்ஸ்தானிகா் தரன்ஜித் சிங் சந்து தொிவித்துள்ளாா். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இலங்கையுடனான இந்திய உறவுகள் கடந்த ஐந்துவருடங்களில் பாரிய மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்தியாவில் சமீபத்தில் இடம்பெற்ற தேர்தல்களில் பிரதமர் நரேந்திரமோடிக்கு கிடைத்துள்ள 

தீர்க்கமான மக்கள் ஆணை அரசாங்கத்தின் கொள்கைகள் தொடரவேண்டும் என மக்கள் விரும்புவதை வெளிப்படுத்தியுள்ளது. மோடி அரசாங்கத்தின் இந்த கொள்கைகள் வலுப்படுத்தப்படுவதும் 

தொடர்வதும் இலங்கையின் நலன்களுடன் தொடர்புபட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்திய மக்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையை 

தெரிவிக்கும் செய்தியுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார். பயங்கரவாதமும் தீவிரவாதமும் மனித குலத்திற்கான கூட்டு ஆபத்துக்களாகும். இலங்கையில் இடம்பெற்றகுண்டுவெடிப்புகள் இலங்கைக்கானவை மாத்திரமல்ல. 

உலகில் எந்த பகுதியில் இடம்பெறும் பயங்கரவாத தாக்குதலும் மனிதகுலத்தின் மனச்சாட்சிக்கு எதிரானது, இது நாங்கள் அனைவரும் ஒன்று என்ற உணர்வின் மீது தாக்குதலை மேற்கொள்கின்றது.

ஜிகாத் கொள்கையை தனிமைப்படுத்தி அழிக்கவேண்டும். இது பிராந்திய சமாதானத்திற்கும் உலக சமாதானத்திற்கும் ஆபத்தானது. இந்நிலையில், இலங்கை வேண்டுகோள் விடுத்தால் 

இந்த விடயத்தில் பிரதமர் மோடி இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவார் என்றார்.