பலத்த காற்று வீசும்? கடற்படையை அவதானமாக செயற்படுமாறு அறிவிப்பு

ஆசிரியர் - Editor II
பலத்த காற்று வீசும்? கடற்படையை அவதானமாக செயற்படுமாறு அறிவிப்பு

காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டருக்கும் அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், மழையுடனான காலநிலையானது எதிர்வரும் இரு நாட்களுக்கு தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு