யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஜோ்மன் நாட்டு பெண் விடுவிக்கப்பட்டாா்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஜோ்மன் நாட்டு பெண் விடுவிக்கப்பட்டாா்..!

யாழ்.புகைரத நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஜோ்மன் நாட்டு பெண்ணிடம் இருந்த பொருட்கள் இலத்திரனியல் உபகரணங்கள் அல்ல. அவை சிறுவா்களின் விளையாட்டு உபகரணஙகள் என்பது கண்டறியப்பட்ட நிலையில் குறித்த பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளாா். 

வயோதிப் பெண் தனது பேரப் பிள்ளைகளுக்கு என ஜேர்மனியிலிருந்து இலத்திரனியல் விளையாட்டு உபகரணங்களை (Toys) எடுத்துவந்திருந்தார். அவற்றுக்கு றிமோல்ட் உள்ளிட்டவையும் இணைக்கப்பட்டிருந்தன. 

அதனால் சந்தேகமடைந்த பாதுகாப்புப் படையினர், வயோதிப் பெண்ணைக் கைது செய்து ஒப்படைத்தனர். அவரிடம் மீட்கப்பட்டவை இலத்திரனியல் விளையாட்டு உபகரணங்கள் என்பதை உறுதி செய்யப்பட்டது. அதனால் வயோதிப் பெண் வாய்மூல முறைப்பாடு பெறப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இன்று காலை வந்தடைந்த தொடருந்தில் பயணிகளிடம் பயணப் பைகள் சோதனையிடப்பட்டன. இதன்போது ஜேர்மனி சென்று திரும்பிய மானிப்பாயைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணின் பயணப் பொதியில் இலத்திரனியல் உபகரணங்கள் காணப்பட்டன.

அதனைச் சோதனையிட்ட படையினர், வெடிபொருள்களுக்கு பயண்படுத்தப்படும் உபகரணங்கள் எனச் சந்தேகம் கொண்டு அந்தப் பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு