குண்டு வெடிப்பு சத்தத்தினால் அச்சத்தில் உறைந்த யாழ்.முளாய் மக்கள்..

ஆசிரியர் - Editor
குண்டு வெடிப்பு சத்தத்தினால் அச்சத்தில் உறைந்த யாழ்.முளாய் மக்கள்..

யாழ்.முளாய் பகுதியில் இரு குண்டு சத்தங்கள் கேட்துடன் வீடுகளும் அதிா்ந்த நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனா்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது. முதலாவது வெடிப்பு சம்பவம் பதிவாகிய பின்னர் மீண்டும் ஒரு பெரிய வெடிப்பு சத்தம் 

கேட்டுள்ளதோடு மூளாய், பித்தனை சுடலை பகுதியில் இருந்து பெரும் புகை எழும்பியுள்ளது. அதேவேளை அப்பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று நின்றதனை மக்கள் அவதானித்துள்ளதுடன், 

இராணுவத்தினர் குண்டினை செயழிலக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்ட போது இந்த சத்தம் கேட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Ads
Radio
×