வன்முறை கும்பலுக்குள் இராணுவ சீருடையுடன் நிற்பவா் யாா்? விசாரணைகளை ஆரம்பித்தது இராணுவம்..

ஆசிரியர் - Editor
வன்முறை கும்பலுக்குள் இராணுவ சீருடையுடன் நிற்பவா் யாா்? விசாரணைகளை ஆரம்பித்தது இராணுவம்..

தும்மோதர பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் வன்முறையாளா்களுடன் இராணுவ சீருடையை ஒத்த சீருடையுடன் காணப்படும் நபா் ஒருவா் தொடா்பாக இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

இது குறித்து இராணுவ பேச்சாளா் கூறுகையில், 

தும்மோதர பகுதியில் வன்முறைக் குழுக்களுடன் இராணுவ சீருடையை ஒத்த சீருடையுடன் ஒருவர் காணப்படுவது தொடர்பில் வெளியான காணொளியில், இருப்பவர் குறித்து இராணுவம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

குறித்த நபர் இராணுவ வீரர் என்பது உறுதியாகினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். குறித்த நபர் தொடர்பில் அறிந்தால் இவ் இலக்கத்திற்கு 0112514280 அறிவிக்கவும்.

Radio
×