1,2 மி முறைகேடான (€)யூரோக்களை பறித்த ஜெர்மன் மோப்ப நாய்!
லூக்கா என்ற ஜெர்மன் மோப்ப நாய் ஒன்று, கடந்த ஆறு மாதங்களில் ஜெர்மன் நாட்டின் முக்கிய Düsseldorf நகர வானூர்தி நிலையத்தில் பயணிகளிடமிருந்து முறைகேடாக கொண்டுவரும் பணங்களை தனது மோப்பத் திறமையால் சுங்க அதிகாரிங்களிடம் பிடித்து கொடுத்து வருகிறது இதுவரைக்கும் 21 பயணிகளிடம் இருந்து முறைகேடாக கொண்டுவந்த €1,200,000. யூரோக்களை பறித்து கொடுத்துள்ளது.
மூன்று வயது உடைய இந்த மோப்ப நாய் ஜெர்மனில் வானூர்தியில் பணியில் இருக்கும் ஒரே நாய் என்றும் அதேவேளை யூரோ, அமெரிக்க டாலர்கள், பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் துருக்கிய லிரா ஆகியவற்றின் வாசனைகளையும் நுகரும் தன்மை கொண்டு பணத்தின் கனவளவையும் கணிக்கவல்லது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒருவர் 10000€ களை மட்டுமே ஒரு வானூர்தி பயணத்தின் போது கொண்டு செல்லலாம் என்பது வானூர்தி நிலைய கட்டுப்பாடு என்பது கூடுதல் தகவல்.