வெற்றிலைக்கேணியில் வெடிபொருள் குறித்து தகவல் வழங்காத கூலித் தொழிலாளி கைது!

ஆசிரியர் - Admin
வெற்றிலைக்கேணியில் வெடிபொருள் குறித்து தகவல் வழங்காத கூலித் தொழிலாளி கைது!

வெற்றிலைக்கேணியில், ஆபத்தான வெடிபொருள் தொடர்பாக தகவல் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டில், கூலி தொழிலாளி ஒருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நீண்டகாலமாக ஆட்கள் அற்று இருந்த வீடொன்றின் காணியை ஒருவர் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அது தொடர்பில் இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற இராணுவத்தினர் வீட்டை சோதனையிட்டனர். அதன் போது வீட்டினுள் சந்தேகத்துக்கு இடமான எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் காணியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, குண்டு போன்றதொரு மர்ம பொருள் ஒன்றை வேலி ஓரம் கண்டு பிடித்துள்ளனர். அது தொடர்பில் அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்த பழனி என்பவரிடம் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது அவர், தான் காணியைத் துப்புரவு செய்யும் போது அந்த பொருள் காணப்பட்டதாகவும் தான் அதனை தூக்கி வேலி ஓரமாக வீசி விட்டு தொடர்ந்து துப்புரவு பணியில் ஈடுபடுவதாகவும் வீட்டு உரிமையாளரின் மகனே தன்னை துப்புரவு பணிக்கு அமர்த்தியதாகவும் கூறியுள்ளார்.

அதனை அடுத்து வெடிபொருள் தொடர்பில் தொடர்பில் தகவல் வழங்க தவறிய குற்றசாட்டில் அந்நபரை கைதுசெய்த இராணுவத்தினர், அவரை பளை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பளை பொலிசார் குறித்த நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , வீட்டு உரிமையாளரின் மகனை அழைத்தும் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு