SuperTopAds

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 33 ஆம் ஆண்டு நினைவஞ்சலி யாழில் நடைபெற்ற போது....

ஆசிரியர் - Admin
தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 33 ஆம் ஆண்டு நினைவஞ்சலி யாழில் நடைபெற்ற போது....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினத்தினம் நினைவஞ்சலி நிகழ்வு கோண்டாவிலிலநேற்று மாலை நடைபெற்றது.

சிறி சபாரத்தினம் படுகொலை செய்யப்பட்ட கோண்டாவிலில் அக் கட்சியின் அரசியல் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.கே.சிவாஐpலிங்கம் தலைமையில் நேற்று திங்கட்கிiமை மாலை இடம்பெற்றிருந்தது.

இதன் போது சிறிசபாரத்தினத்தின் படத்திற்கு அக் கட்சியின் தற்போதைய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மலர் மாவை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அக் கட்சியின் பிரதித் தலைவர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்ததுடன் தீபமேற்றி; மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந் நிகழ்வில் கட்சியின் பிரதித் தலைவர் கென்றி மகேந்திரன், பொதுச் செயலாளர் என். சிறிக்காந்தா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராலிங்கம் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

News Thanks : Nitharsan Vino