500 நாட்களின் பின் ஊடகவியலாளாளர்கள் விடுதலை!
மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்து உண்மைகளை வெளியிட்ட சர்வதேச ஊடக நிறுவனமான ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரச இரகசியங்களை வெளியிட்ட்தாக கூறி மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.பல்வேறு தரப்பில் இந்த கைதுக்கும், தண்டனைக்கும் ஐ.நா உட்பட சர்வதேச அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
எனினும் மியான்மரில் வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கவிருப்பதனால் சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை முன்னிட்டு ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவரும் 500 நாட்களுக்கு பின் விடுதலை கிடைத்துள்ளது.
விடுதலையின் பின் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ள அவர்கள் மனைவி குழந்தைகளோடு எடுத்த ஒளிப்படங்களை வெளியுட்டுள்ளனர்.