SuperTopAds

மன்னாா் மனித புதைகுழி விவகாரம்..! முக்கிய அறிக்கை இன்று நீதிமன்றுக்கு சமா்பிக்கப்படுகிறது.

ஆசிரியர் - Editor I
மன்னாா் மனித புதைகுழி விவகாரம்..! முக்கிய அறிக்கை இன்று நீதிமன்றுக்கு சமா்பிக்கப்படுகிறது.

மன்னாா் புதைகுழி விவகாரம் தொடா்பில் நீதிமன்றத்தினால் கோரப்பட்ட அறிக்கை இன்று மன்றுக்கு சமா்பிக்கப்படவுள்ளது. 

இந்த அறிக்கை எதிர்வரும் மாதம் 31ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அகழ்வுப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கும் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கைக்கு தேவையான அனைத்து சோதனைகளும் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகழ்வின்போது மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்கள் நீதிமன்ற அனுமதியின் பேரில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

அறிக்கையை வழங்கியதன் பின்னர் அகழ்வுப்பணிகளை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பில் நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் என ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் மன்னார் சதொச கட்டட நிர்மாண நடவடிக்கைகளுக்காக நிலத்தைத் தோண்டியபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து 

அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.அகழ்வுப் பணிகளின்போது மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் பீட்டா நிறுவனத்திற்கு சோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. 

இதன்போது குறித்த மாதிரிகள் 350 முதல் 600 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துக்குரியவை என அமெரிக்காவின் பீட்டா நிறுவனத்தினால் கால எல்லை நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகக்து.