நித்திரையால் எழுந்த டக்ளஸ் உளறல்..!

ஆசிரியர் - Editor
நித்திரையால் எழுந்த டக்ளஸ் உளறல்..!

தமிழினத்தின் பெயாில் வன்முறைகள் இடம்பெற்றபோது தமிழ் சமூகம் மௌனியாக இருந்ததன் விளைவே முள்ளிவாய்க்கால் என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா். 

நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,

இஸ்லாம் சமூகத்தினுடைய பெயரால் நடத்தப்பட்ட வன்முறைகளை, அந்த மதத்தை, சமூகத்தைச் சேர்ந்த, அரசியல் தலைவர்கள் பர் குரல்கொடுத்து வருகின்றனர். 

இதுபோல் தமிழ் மக்களுடைய பிரச்சினையிலும், இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்குப் பின்னர் இனத்தினுடைய பெயரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக 

தமிழ்ச் சமூகம் அன்றைக்கே முன்வந்து குரல் கொடுத்திருந்தால், இவ்வளவு இழப்புக்களைச் சந்திக்க வேண்டி இருக்காது என்றார்.

Radio
×