SuperTopAds

தற்கொலை தாக்குதல் தொடா்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும்..!

ஆசிரியர் - Editor I
தற்கொலை தாக்குதல் தொடா்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும்..!

உயிா்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் தொடா்பான விசாரணைகளை நடாத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா். 

புதிய பாது­காப்­புச் செய­ல­ராக நிய­மிக்கப்­பட்­டுள்ள ஜென­ரல் சாந்த கோட்­டே­கொட நேற்று முற்­ப­கல் பாதுகாப்பு அமைச்­சில் கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­றார்.

அந்த நிகழ்­வில் கலந்­து­கொண்ட பின்­னர் பாது­காப்­புத் துறை­யின் மூத்த அதி­கா­ரி­க­ளு­டன் அரச தலை­வர் கலந்து­ரை­யா­டி­னார். அந்­தச் சந்­திப்­பின்­போதே இத­னைத் தெரி­வித்­தார் என்று அவ­ரது ஊட­கப் பிரிவு அனுப்பியுள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது, 

பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல் தொடர்­பாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள 3 பேரைக் கொண்ட சிறப்பு விசா­ர­ணைக் குழு­வின் அறிக்கை அனை­வ­ருக்­கும் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டும்.

இந்த மிலேச்­சத்­த­ன­மான பயங்­க­ர­வா­தத்தை முற்­றாக ஒழித்து நாட்­டின் தேசிய பாது­காப்பு விரை­வில் உறுதி செய்­யப்­ப­டும் என்று அரச தலை­வர் குறிப்­பிட்­டார்.

இந்­தத் தாக்­கு­தல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்த பின்­னர் உல­கின் வேறெந்த நாட்­டி­லும் இடம்­பெ­றாத வகை­யில் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு தக­வல்­க­ளைத் திரட்­ட­வும், கைது நடவடிக்கைகளை மேற்­கொள்­ள­வும் நாட்­டின் புல­னாய்­வு­து் துறை உள்­ளிட்ட பாது­காப்­புத் தரப்­பி­ன­ரால் முடிந்துள்­ளது.

அவர்­க­ளின் திற­மையை பாராட்­டு­கின்­றேன். அதற்­கான பங்­க­ளிப்பை வழங்­கிய அனை­வ­ருக்­கும் எனது நன்றியைத் தெரி­வித்­துக் கொள்­கின்­றேன் என்று அரச தலை­வர் குறிப்­பிட்­டார்.

பாட­சா­லை­க­ளின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக எதிர்­கா­லத்­தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள பாதுகாப்பு வேலைத் திட்­டங்­கள் தொடர்­பா­க­வும், அரச அலு­வ­ல­கங்­க­ளின் செயற்­பா­டு­களை வழ­மை­போன்று மேற்­கொள்­வது தொடர்­பா­க­வும் இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

நாட்­டின் எந்­தச் செயற்­பா­டு­க­ளும் செய­லி­ழப்­ப­தற்கு இட­ம­ளிக்­காது அவற்றை வழ­மை­போன்று மேற்கொள்வதற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் அரச தலை­வர் வலி­யு­றுத்­தி­னார். என்­றுள்­ளது.