SuperTopAds

அலுவலகம் என்னுடையதுதான்..! ஆனால் அங்கிருந்த ஆயுதங்கள் குறித்து எனக்கு தெரியாது..

ஆசிரியர் - Editor I
அலுவலகம் என்னுடையதுதான்..! ஆனால் அங்கிருந்த ஆயுதங்கள் குறித்து எனக்கு தெரியாது..

காத்தான்குடியில் உள்ள தனது அலுவலகத்திற்குள் T- 56 துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டமைக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை. என கிழக்கு ஆளுநர் ஹிஷ்புல்லா அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் காத்தான்குடியில் உள்ள கிழக்கு ஆளுநரின் அலுவலகத்திற்குள் இருந்து T- 56 துப்பாக்கி ரவைகள், மற்றும் ரவை கூடுகள் இன்று மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து இன்று மாலை ஆளுநர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி குறிப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.