சிங்கள மக்கள் அணியும் ஆடைகளை கொள்வனவு செய்தது யாா்..? விகாரைகள் மீது தாக்குதல் நடாத்தும் திட்டமா?

ஆசிரியர் - Editor I
சிங்கள மக்கள் அணியும் ஆடைகளை கொள்வனவு செய்தது யாா்..? விகாரைகள் மீது தாக்குதல் நடாத்தும் திட்டமா?

கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற இராணுவ முற்றுகைக்குள் இருந்து வெள்ளை நிற ஆடைகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆடைகள் சிங்கள பெண்கள் அணியும் ஆடைகளை ஒத்ததாக உள்ளதுடன், குறித்த ஆடைகள் உட்டபட 9 வெள்ளை நிற ஆடைகள் மீாிகம பகுதியில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றில் 29000 ரூபாய் செலவிடப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. 

குறித்த ஆடைகளை புா்க்கா அணிந்துவந்த 3 பெண்கள் கொள்வனவு செய்துள்ளனா். அவா்கள் தொடா்பான தகவல்கள் தொிந்திருந்தால் அடையாளப்படுத்த உதவுமாறு பொலிஸாா் கேட்டுள்ளனா். கடந்த 19ம் திகதி மீாிகம பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றுக்கு சென்ற புா்க்கா அணிந்த 3 பெண்கள் 9 வெள்ளைநிற ஆடைகளை கொள்வனவு செய்துள்ளனா்.

இந்த ஆடைகளில் 5 ஆடைகள்  சாய்ந்தமருது பகுதியில் இராணுவம் முற்றுகையிட்ட வீட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மிகுதி 4 ஆடைகள் எங்குள்ளன? அதனை கொள்வனவு செய்தவா்கள் யாா்? என்பன போன்ற தகவல்கள் தொிந்தவா்கள் பொலிஸாருக்கு தொியப்படுத்தும்படி பொலிஸாா் கேட்டிருக்கின்றனா். மேலும் இந்த ஆடைகள் சிங்கள பெண்கள் அணியும் ஆடைகளை ஒத்ததாக உள்ள நிலையில், 

குறித்த ஆடைகளை அணிந்து சென்று வெசாக் தினங்களில் தாக்குதல் நடாத்தும் திட்டங்கள் இருக்கலாம் என்றகோணத்தில் பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு