பொதுமக்களுக்கு அவசர எச்சாிக்கை..! நெருங்கிவரும் மிகப்பொிய சூறாவளி.

ஆசிரியர் - Editor I
பொதுமக்களுக்கு அவசர எச்சாிக்கை..! நெருங்கிவரும் மிகப்பொிய சூறாவளி.

வங்களா விாிகுடாவில் நிலைகொண்டுள்ள “போனி” சுறாவளியினால் கிழக்கு மற்றும் தென், தென்கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடிக்கு செல்வதை தவிா்க்குமாறு வானிலை அவதான நிலையம் எச்சாித்துள்ளது. 

இந்த சூறாவளியானது எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் மிகப் பலத்த  சூறாவளியாகவும் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதேபோல், மேல், தென், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் 150 மி.மீ அளவான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் ,  

தென், மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா பரணாட்டகல் பகுதியில், அதிக மழையுடன் வீசிய கடுங்காற்று காரணமாக 26 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக 94 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு