தற்கொலை குண்டுதாாிகள் பயன்படுத்திய 12 வாகனங்கள் எங்கே..?

ஆசிரியர் - Editor I
தற்கொலை குண்டுதாாிகள் பயன்படுத்திய 12 வாகனங்கள் எங்கே..?

உயிா்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை தாக்குதலை நாடாத்திய தீவிரவாதிகள் 18 வாகனங்களை பயன்படுத்தியுள்ளதாக புலனாய்வு பிாிவு தகல்கள் தொிவிக்கின்றன. 

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 18 வாகனங்களில் 6 வான்கள், 9 மோட்டாா் சைக்கிள்கள், 2 காா்கள், கப் வாகனம் ஆகியன உள்ளடங்குகின்றது.

இந்நிலையில் 6 வாகனங்கள் மாத்திரமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்,  புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய மொஹமட் முபாரக் மொஹமட் அஸாமின் பெயரில் 3 மோட்டார் சைக்கிள்களும் 

வானொன்றும் கப் ரக வாகனமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு