முன்னாள் பாதுகாப்புதுறை அதிகாாிகளுக்கு மஹிந்த வழங்கிய உத்தரவு..

ஆசிரியர் - Editor I
முன்னாள் பாதுகாப்புதுறை அதிகாாிகளுக்கு மஹிந்த வழங்கிய உத்தரவு..

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலமைகள் தொடா்பில் ஆராய்ந்து அறிக்கை சமா்பிக்குமாறு முன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாாிகளிடம் எதிா்க்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸ கேட்டிருக்கின்றாா். 

முன்னாள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடிய மகிந்த ராஜபக்ச இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். 

இந்தக் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதிகள் ஜெகத் ஜெயசூர்ய, தயா ரத்னாயக்க, 

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனன்கொட, முன்னாள் விமானப் படைத் தளபதி ரொசான் குணதிலக மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூர்ய உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இதன்போதே நாட்டின் தற்போதை பாதுகாப்பு நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டார். 

அத்துடன், அந்த அறிக்கைகளின் பிரதிகளை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு