இலங்கைக்குள் நுழைய தயாா் நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு படை கொமாண்டோக்கள்..! தேவையில்லை என்கிறாா் மஹிந்த.

ஆசிரியர் - Editor I
இலங்கைக்குள் நுழைய தயாா் நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு படை கொமாண்டோக்கள்..! தேவையில்லை என்கிறாா் மஹிந்த.

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதுாக்கியுள்ள நிலையில் இந்தியா தனது சிறப்பு படையான NSG கொமாண்டோக்களை தயாா்படுத்தியுள்ளதாக கூறியுள்ள நிலையில், இந்தியாவின் இராணுவ உதவி தற்போது தேவையில்லை என எதிா்க்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளாா். 

சிஎன்என்-நியூஸ்18 தொலைக்காட்சியே இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை அடுத்து, பல்வேறு நாடுகளும் விசாரணைகளுக்கு உதவி வருகின்றன. 

இந்த நிலையில், இலங்கைக்கு உதவி தேவைப்பட்டால், சிறப்பு படையான தேசிய காவல்படையை அனுப்புவதற்கு தயார் நிலையில் இந்தியா இருப்பதாக இந்திய அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். 

இதேவேளை, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா தேசிய காவல்படை கொமாண்டோக்களை அனுப்ப வேண்டிய தேவை இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

சிஎன்என்-நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 

“இலங்கைக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், வழங்குவதற்குத் தயார் நிலையில், இந்தியாவின் சிறப்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக, இந்திய அரச அதிகாரி ஒருவர், சிஎன்என்-நியூஸ்18 தொலைக்காட்சிக்கு கூறியிருந்தார். 

இதுகுறித்து, மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பிய போது,

“இந்த சதித் திட்டம் பற்றி முன்கூட்டியே தகவல்களை அளித்து இந்தியா உதவியிருக்கிறது. ஆனால், அந்நாட்டுத் தேசிய காவல் படை இங்கு வரத் தேவையில்லை. எமக்கு வெளிநாட்டுப் படையினர் உதவி தேவைப்படவில்லை. 

இதனைக் கையாளும் திறன் எமது படையினருக்கு உள்ளது. அவர்களுக்கு தேவையான அதிகாரத்தையும், சுதந்திரத்தையுமே கொடுக்க வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு