யாழ்.நாவாந்துறையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் அறை..! பல கோணங்களில் விசாரணைகள் தீவிரம்.

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவாந்துறையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் அறை..! பல கோணங்களில் விசாரணைகள் தீவிரம்.

யாழ்.நவாந்துறை பகுதியை அண்டிய முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் வீடொன்றுக்குள் கண்டு பிடிக்கப்பட்ட நிலக்கீழ் அறை தொடா்பாக பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெறுவதாக பாதுகாப்பு தரப்பினரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி வருகின்றது. 

யாழ்.நாவாந்துறை பகுதியை அண்டியுள்ள ஒஸ்மானியா கல்லுாாி வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வீடொன்றுக்குள் நிலக்கீழ் தளம் இருப்பது சிறப்பு அதிரடிப் படையினரால் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு மாடி வீட்டின் நிலத்திற்கு கீழ் நுட்பமான முறையில் பதுங்குகுழி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பதுங்கு குழி 25 மீற்றர் உயரத்திலும் 15 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. தகடுகளினால் முடிய பாதுகாப்பு கதவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பதுங்கு குழிக்கு முழுமையான மின்சார வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தற்போது வரையில் இந்த பதுங்கு பாவனையில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் சொந்த வீடு இதுவென அடையாளம் காணப்பட்டுள்ளது. 

குறித்த வர்த்தகர் தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளார். 

அவர் வழங்கி பல தகவல்களின்படி அடுத்தகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு