சாய்ந்தமருது, சம்மாந்துறை, சவளக்கடை பகுதிகளில் மட்டுமே ஊரடங்கு சட்டம் அமுல்..!

ஆசிரியர் - Editor I
சாய்ந்தமருது, சம்மாந்துறை, சவளக்கடை பகுதிகளில் மட்டுமே ஊரடங்கு சட்டம் அமுல்..!

இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையில் துப்பாக்கி சண்டை இடம்பெற்ற கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை பகுதிகளில் மாலை 5 மணி தொடக்கம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மற்றய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இல்லை. 

மேற்படி தகவலை பொலிஸ் பேச்சாளா் உறுதிப்படுத்தியுள்ளாா்.  கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து தொடர்ச்சியாக பதற்றமான நிலைமை காணப்பட்டமையினால், 

நேற்று முன்தினம் இரவு முதல் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 10 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையிலேயே இன்று 5 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு