கிளிநொச்சியில் இரு இடங்களில் பாாிய தேடுதல் இராணுவ சீருடைகள், மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்பு..
கிளிநொச்சி- தருமபுரம் பகுதியில் வீடொன்றை சோதனையிட்டபோது இராணுவ சீருடைகள் மற்றும் கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்கள் தருமபுரம் பொலிஸ்நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன்
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேபோல் கிளிநொச்சி – தருமபுரம் உழவனுார் பகுதியிலுள்ள
முஸ்லிம் வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த வீட்டில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.