SuperTopAds

தமிழீழ விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என்றவா்கள், முஸ்லிம் தீவிரவாதிகளை, காட்டுமிராண்டிகளை கண்டு கொள்ளாமல் இருக்கிறா்கள்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என்றவா்கள், முஸ்லிம் தீவிரவாதிகளை, காட்டுமிராண்டிகளை கண்டு கொள்ளாமல் இருக்கிறா்கள்..

உயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களுக்கு தாா்மீக பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி, பிரதமா் பதவி விலகவேண்டும். என கூறியிருக்கும் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம், 

தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடா்புகளை பேணியதற்காக எங்களை விசாாித்தவா்கள் இஸ்லாமிய அரசியல்வாதிகளையும், கிழக்கு மாகாண ஆளுநரையும் விசாாிக்க தயக்கம் காட்டுவதற்கு எதற்காக? எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றாா். 

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார், இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முற்கூட்டியே எச்சரிகை அறிவுறுத்தல் கிடைக்கபெற்றது என தற்போது ஒப்புக்கொள்ளும் அரசு 

சம்பவத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக கூட வெளிப்படுத்தியிருந்தால் மக்கள் விழிப்;பாக இருந்திருப்பார்கள் அரசு பாரிய தவறிழைத்;துவிட்டது என தெரிவித்த அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இங்கிருந்து சென்ற ஒரு நபர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து ஒரு தாக்குதலில் உயிரிழந்தார் என்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தபோது இலங்கை அரசு மற்றும் புலனாய்வு பிரிவினர் ஏன் கண்களை மூடிகொண்டு இருந்தனர்?

இது இன்று நேற்று அல்ல பலவருடங்களாக பல முஸ்லிம் அமைப்புக்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளது. இதனை அரசு கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது. வடக்கிலே ஒரு பிரச்சினை என்றால் பெரிதுபடுத்தி தமிழீழ விடுதலை புலிகளின் பாடல் ஒலிபரப்பினால், 

புலிகொடி வைத்திருந்தால் புகைப்படம் வைத்திருந்தால் குற்றம் என கூறி வடக்கு இளைஞர்களை சுற்றி கைதுகள் தடுப்பு காவல் என செயற்பட்ட அரசு ஏன் இந்த தாக்குதல் தயார் நிலைகளை கவனத்தில் எடுக்காது விட்டுள்ளது என்பது தெரியவில்லை.

குறிப்பாக திகன பகுதியில் இடம்பெற்ற பிரச்சினை அதிலே புத்தர் சிலை உடைக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்கள் தான் இந்த தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகளில் வெளிவருகிறது. 

அதை தொடர்ந்து புத்தளம் வனாதவில்லு பகுதியில் உள்ள தென்னம்தோப்பில் பெருமளவான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள்  மீட்கப்பட்டபோதும் ஏன் அதன் வீசாரணைகள் நீளவில்லை?. தற்போதும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கூறுகிறார்.

அதில் கைது செய்யபட்டவர்கள் அதி பலம் வாய்ந்த அரசியல்வாதிகளின் அழுத்ததால் விடுவிக்கப்பட்டுள்ளனர் என, ஆகவே பொதுமக்களின் பாதுகாப்பு எந்தளவில் உள்ளது என்பது இதில் தெரிகிறது.

ஆகவே இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுங்கள் என்று 2017, 2018, 2019 இந்த ஆண்டிலும் கூட கூறியும் எந்தவித நடடிவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. ஏப்ரல் 4ஆம் திகதி இந்திய புலனாய்வு பிரிவு தெரிவுபடுத்தியும், 

இலங்கை புலனாய்வு பரிவும் தெளிவாக அறிவுறுத்தியும் அரசு மௌனமாக இருநத்து ஏன்? 11ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு தரப்பிறகு ஒரு சுற்றுநிருபத்தை அனுப்பிவிட்டு இருந்துள்ளார். ஆகவே இந்த விடயத்தில் அரசு அமைதியாக இருந்தது ஏன்? 

ஆகவே இவ்விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும். ஏன் முஸ்லீம் பயங்கரவாதிகள் என கூறுவதற்கு அரசு தயங்குகிறது? இஸ்லாமிய அடிப்படை வாதிகள் என்று கூறும் அரசு ஏன் தமிழீழ விடுதலைபுலிகள் என்பதோடு நிற்காது 

தமிழ் புலிகள் என ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் புலிகள் என அடையாளப்படுத்திய அரசு சர்வதேசத்திற்கும் அறைகூவியது. அனால் தற்போது முஸ்லீம் அடிப்படைவாதிகள் என்கிறது ஏன் முஸ்லீம் பயங்கரவாதிகள் என கூறுங்கள் அதை முஸ்லீம் மக்கள் ஏற்கிறார்கள் ஏற்கவில்லை என்பது அடுத்தவிடயம். 

இந்த தாக்குதலை தொடரந்து நடத்தும் இவர்கள் ஒரு மிலேச்சதனமான காட்டுமிராண்டிதனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்தும் அச்சுறுதல் ஏற்படுத்துகின்றனர். இவர்களை அடிப்படைவாதிகள் என கூறுவதில் அர்த்தம் இல்லை.

இதனைவிட இந்த இஸ்லாம் பயங்கரவாத இயக்கத்திற்கும் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட பல அரசியல் தலைமைகள் தொடர்பு பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் பாரபட்சம் இன்றி விசாரணை செய்து தண்டிக்கப்படவேண்டும், 

நாட்டில் தற்போது சிறப்புரிமை என்பது இல்லை சிறப்புரிமை அகற்றப்பட்டு பத்து வருடங்கள் ஆகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் சார் நடவடிக்கை தொடர்பில் தமிழ் பிரதிநிதிகள் எம்மை விசாரணைக்குட்படுத்த அரசுக்கு முடியுமானால் ஏன் முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகளை விசாரிக்கமுடியாது. 

ஆகவே இவ்விடயத்தில் அரசு பொறுப்புடன் செயற்படவேண்டும் என்றார்.