கடந்த 4ம் திகதியே தீவிரவாத தாக்குதல் குறித்து எச்சாிக்கை கிடைத்துவிட்டது..! மண்டையை சொறிந்து கொண்டிருந்த பொலிஸ்.

ஆசிரியர் - Editor I
கடந்த 4ம் திகதியே தீவிரவாத தாக்குதல் குறித்து எச்சாிக்கை கிடைத்துவிட்டது..! மண்டையை சொறிந்து கொண்டிருந்த பொலிஸ்.

பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படக்கூடும் என வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்று கடந்த 4ஆம் திகதி கிடைக்கப்பெற்றிருந்தது. அதில், தாக்குதல்களை மேற்கொள்ளபவர்கள் யார்? எந்த இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளன. 

எவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பன தொடர்பில் விரிவாக அறிக்கையிடப்பட்டிருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த கடிதம் அன்று முதல் 12 ஆம் திகதிவரை பாதுகாப்பு பிரிவுகளின் பிரதானிகளுக்கு இடையில் பரிமாற்றப்பட்டிருந்ததாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த கடிதம், புலனாய்வு பிரிவு பணிப்பாளரிடமிருந்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும், அவரிடமிருந்து தேசிய பாதுகாப்பு பிரதானிகளுக்கும் கைமாற்றப்பட்டிருந்ததுடன், பின்னர் அது காவல்துறைமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

குறித்த வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய கடித்தை காவல்துறைமா அதிபர், 5 பிரதி காவல்துறைமா அதிபர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, குறித்த பயங்கரவாத நடவடிக்கை தொடர்பில் எவ்வாறான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தார்

அத்துடன் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், பாதுகாப்புச் செயலாளரிடமும், காவல்துறைமா அதிபரிடமும், தான் விளக்கம் கோரியதாகவும், இதன்போது பொலிஸ்மா அதிபர் தவறு இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டார் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இவ்வாறு ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு