தீவிரவாதிகளை தியாகிகள் என கூறி வீரவசனம் பேசியவர் ஓடி ஒழிந்தார். தேடுகிறது பொலிஸ்..
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தி தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவரவாதிகளை குற்றம் சொல்லாதீர்கள் என கூறிய தீவிரவாதியை பொலிஸார் தேடிவருகின்றனர்.
தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து காணொளி ஒன்றை வெளியிட்டிருந்த குறித்த மெளவி மிகமோசமான இனவாத கருத்துக்களை பேசியிருந்தார். அதில் குறிப்பாக,
நாட்டில் நிலப்பரப்பை கோரி இஸ்லாமிய மக்கள் போரில் ஈடுபடவில்லை எனவும் பொறுமையின் எல்லை தாண்டியுள்ளதால், போராட்டம் நடத்தி இஸ்லாமியர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். என கூறுகிறார்.
இந்த காணொளி தொடர்பாக பல தரப்பினர் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், செட்டிக்குளம் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த முனாஜித் என்ற மௌலவியே சமூக வலைத்தளத்தில் இந்த காணொளியை வெளியிட்டிருந்தார். 8 நிமிடங்கள் ஓடக் கூடிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய மௌலவி பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய வவுனியா மற்றும் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த மௌலவி தௌஹீத் ஜமாத் அமைப்பினை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.