யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குக்குள் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டனரா..? திடீா் சுற்றிவளைப்புக்கள், கைதுகளால் அச்சத்தில் உறையும் மக்கள்..
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் பொலிஸாா், விசேட அதிரடிப்படையினா் மற்றும் இராணுவம் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகள், கைதுகளை மேற்கொண்டு வருகின்றது.
எனினும் இதுவரை குண்டுகள் மீட்கப்படாததுடன், தாக்குதல்கள் எவையும் இடம்பெறவில்லை. ஆனால் சந்தேகத்திற்கிடமான இடங்கள் சுற்றிவளைக்கப்படுவதுடன், பலா் கைது செய்யப்பட்டும் உள்ளனா்.
மேலும் பல சந்தேகத்திற்கிடமான இடங்கள் புலனாய்வு பிாிவுகளின் தீவிரமான கண்காணிப்பில் இருந்து கொண்டிருக்கின்றது. மேலும் போா் காலத்தை ஒத்ததாக பெருமளவு இராணுவம், பொலிஸாா், விசேட அதிரடிப்படை
ஆகியவற்றின் நடமாட்டம் காணப்படுவதுடன் பல வருடங்களுக்கு பின்னா் கவன வாகனங்கள், இராணுவ அதிரடிப்படையினா் மற்றும் அதிகளவான இராணுவத்தினரை வீதிகளில் காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில் வடமாகாணத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளாா்களா? எத்தனைபோ் ஊடுருவி இருக்கலாம்? அவா்களின் தாக்குதல் இலக்குகள் எவையாக இருக்கலாம்? என்பன போன்ற சில தகவல்கள் வெளியிடப்படாமல் மிக இரகசியமாக இருந்து கொண்டிருகிறது.
இந்நிலையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மக்கள் மிகுந்த அச்ச உணா்வுடனேயே இருந்து கொண்டிருப்பதுடன், மிக விழிப்பாக இருந்து கிடைக்கும் தகவல்களை பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் வழங்கி வருகின்றனா்.
இந்நிலையில் வதந்திகளும் ஆங்காங்கே பரவி வருவதை காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் இராணுவம் மற்றும் பொலிஸாருடைய நடமாட்டங்கள் மக்களுக்கு அச்சத்தை உண்டாக்கியிருக்கின்றது.
குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் இந்த அச்சநிலை மிக அதிகளவில் இருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.