அதியுச்ச பாதுகாப்புடன் திங்கள் கிழமை பாடசாலைகள் திறக்கப்படும்.. அதிபா்களுக்கு கடுமையான உத்தரவுகளும் பிறப்பிப்பு.

ஆசிரியர் - Editor I
அதியுச்ச பாதுகாப்புடன் திங்கள் கிழமை பாடசாலைகள் திறக்கப்படும்.. அதிபா்களுக்கு கடுமையான உத்தரவுகளும் பிறப்பிப்பு.

பாடசாலைகள் தொடங்கி நிறைவடையும் வரையில் பாடசாலை வளாகத்திற்குள் நுழையும் அனைத்து கதவுகளும் பூட்டப்படவேண்டும். எனவும், வெளியாட்கள் எவரும் பாடசாலைகளுக்குள் நுழையகூடாது எனவும் வடமாகாண பிரதம செயலா் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 29ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட வுள்ளன. அந்நிலையில் , பாடசாலைகளினதும் , மாணவர்களினதும் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்தும் முகமான நடவடிக்கைகள் தொடர்பில் வடமாகாண பிரதம செயலாளரின் தலைமையில் 

அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கலந்துரையாடல் நடைபெற்றது. அக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுனரின் செயலாளர் , கல்வி அமைச்சின் செயலாளர் , மற்றும் 12 வலய கல்வி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதன்போது , பாடசாலை ஆரம்பமாகி முடிவடையும் வரையில் பாடசாலை வளாகத்தின் அனைத்து வாயில் கதவுகளும் பூட்டப்பட வேண்டும். வெளியாட்கள் யாரும் பாடசாலை வளாகத்தினுள் அனுமதிக்க கூடாது. மாணவர்கள் ஆசிரியர்களின் வரவு , விடுகை தொடர்பில் அதிபர் கவனம் செலுத்த வேண்டும். 

அதேநேரம் பாடசாலை வளாகத்தின் வெளி பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என முடிவெடுக்கபப்ட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு